இதை எல்லாம் தாண்டி. ஒரு ஆணிடம் யாருமே உனக்கு என்ன பிடிக்கும், என்ன வேண்டும் என்று கேட்பது கூட இல்லை. என் தாய் கூட கேட்டது இல்லை. சென்சிடிவ் ஆன ஆண்களுக்கு சில சமயம் ஒரு எமோஷனல் சப்போர்ட் தேவைபடும். அந்த சப்போர்ட்டை யாரும் தர மாட்டார்கள். ஆணின் சில நண்பர்களை தவிர.
சில சமயம் சில பிரச்சனைகளை புலம்பி மட்டுமே கடந்து விடலாம். ஆனால், அதை சொல்லி வீட்டில் இருப்பவர்களை கஷ்டபடுத்த வேண்டாம் என்று ஆண்கள் சொல்ல மாட்டார்கள்.