மனதை கட்டுப்படுத்துவது எப்படி? மரண பயம் கூட ஓடிவிடும்!

KAILASA's SPH Nithyananda

KAILASA's SPH Nithyananda

61,688 views

ஒரு மணி நேரம் ஆழ்ந்த அமைதியுடன் கேளுங்கள் மனதின் எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது, வாழ்க்கையையே மாற்றும் ஆழமான சத்யம் .

மனதின் செயல்பாடுகள் குறித்தும், எண்ண ஓட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் ஆழமாக விளக்குகிறார். நமது எண்ணங்கள் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அல்ல, மாறாக ஒவ்வொரு எண்ணத்திற்கும் நடுவே ஒரு இடைவெளி உள்ளது என்ற அரிய உண்மையை இந்த வீடியோவில், பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் எடுத்துரைக்கிறார்.

மகிழ்ச்சி அல்லது துக்கம் என நாம் நினைக்கும் அனைத்துமே நமது கற்பனையில் உருவாக்கப்பட்ட சங்கிலிகளே. தேவையற்ற பயம், கவலை மற்றும் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட, எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை உணர்ந்து "அன்க்ளட்ச்" (Unclutch ) செய்வது எப்படி என்பதை மிக எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறார். மரண பயத்தை வெல்வது முதல் அன்றாட வாழ்வின் கவலைகளைத் தீர்ப்பது வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு 'அன்க்ளட்ச்' மட்டுமே என்பதை இந்த சத்சங்கம் உணர்த்துகிறது.

தேதி: 16 ஆகஸ்ட் 2009
இடம்: சென்னை

Date: 16 August 2009
Place: Chennai