'நான் யார்?' - பகுதி 1 | நாம் தேடுவது நம்மிடமே உள்ளது |ரமண மகரிஷியின் உபதேச விளக்கம்

இதோ கொஞ்சம் அமுதம்

இதோ கொஞ்சம் அமுதம்

23,663 views

✍️ரமண மகரிஷி அருளிய மிக பிரசித்தி பெற்ற ஞானப் பனுவலாலாகிய 'நான் யார்?' நூல் முழுவதற்கும் விளக்கமளிக்கும் முயற்சி இது.

நூலின் ஒவ்வொரு வாக்கியத்திலும் பொதிந்துள்ள ஆழ்பொருள் அர்த்தங்களை அகழ்ந்தெடுக்கும் ஒரு பிரயத்தனம்.

இது முதல் பகுதி. அடுத்தடுத்த பகுதிகள் தொடர்ந்து வரும்.

இந்த முதல் பகுதி, "நான் யார்?" நூலின் முதல் பத்தியில் புதைந்துள்ள மனித உளவியலையும், அத்வைத வேதாந்த ரகசியத்தையும் 'குரு-மாணவி' உரையாடல் வடிவில் மிக எளிமையாகவும், ஆழமாகவும் விளக்குகிறது.

இந்தப் பதிவில் உள்ள முக்கிய அம்சங்கள்:
✨மனிதனின் ஓயாத தேடலின் நோக்கம் என்ன?
✨ மனிதன் ஏன் தன்னைச் சுற்றி உள்ள அனைத்தையும்விடத் தன்னைத் தான் அதிகம் நேசிக்கிறான்?
✨தேடும் சுகம் எங்கே இருக்கிறது?
✨ தூக்கம் என்பது அறியாமை இருளா? அல்லது ஆன்மாவின் பேரானந்த நிலையா?
✨ தியானம், யோகம் போன்ற மற்ற வழிகளை விட "நான் யார்?" (ஆத்ம விசாரம்) ஏன் மிக முக்கிய சாதனம்?

ஞானத் தேடல் கொண்டவர்களுக்கெல்லாம் வானமுது.
---------------------
தொடர்புடைய பதிவுகள்:

அத்வைத தத்துவம் பற்றி மிக எளிமையாகத் தெரிந்துகொள்ள-
📌நீயே அது (தத் த்வம் அசி) - அத்வைதம் ஓர் எள...

ஆத்ம ஞானத்தின் சாரமான நான்கு மகா வாக்கியங்களின் விளக்கம் அறிய-
📌நான்கு மகாவாக்கியங்கள் (வேதாந்தத்தின் சாரம்)

அத்வைதம் முதலான பல்வேறு தத்துவங்களை விளக்கும் பதிவுகளின் தொகுப்பு-
📌தத்துவ அமுதம்

ரமண மகரிஷியின் உபதேச வாக்கியங்களை எளிய முறையில் குரு-மாணவி உரையாடல் வடிவில் விளக்கும் பதிவுகளின் தொகுப்பு:
ரமண அருளமுத விளக்கம்-
📌ரமண அருளமுத விளக்கம்
-----------------------

📢 குரு-மாணவி குரல்கள்:
செயற்கை நுண்ணறிவு.

📚ரமணோபதேச ஆதாரம்:
ஸ்ரீ ரமணாசிரம வெளியீட்டு நூல்கள்.

✒️ஆக்கம்:
கவிஞர் பத்மதேவன்
------------------------
#RamanaMaharshi #WhoAmI #NaanYar #AdvaitaVedanta #SelfInquiry #TamilSpirituality