கிறங்குகிறேன் காதலில் மெல்ல by Sakthi Guru | Full Audio பிரியா மோகன்|Mallika Manivannan Publications

Mallika Manivannan Publications

Mallika Manivannan Publications

350,067 views

கிறங்குகிறேன் காதலில் மெல்ல
எழுத்தாளர்:  சக்தி குரு

ருத்ரன் இராணுவத்தில் பணியாற்றும் போராளி. நாட்டுக்காக உயிரை கொடுக்க நினைப்பவன்!

குறிக்கோளுடன் இராணுவத்தில் இணைந்தவனுக்கு திருமண வாழ்க்கை கடினமானது.

திலோத்தமா எனும் பெயரில் விழுந்தவன், அந்த பெயர் கொண்ட பெண்ணிடமும் மொத்தமாக
வீழ்ந்து போகிறான்.

குறுகிய நாட்களுக்குள் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைப்பவன், திலோத்தமா மனதை
புரிந்து கொள்ள முடியாமலே அவளுடன் வாழ்ந்து விடுகிறான்!

பிரிந்தும் விடுகிறான்!

எதிர்பார்ப்புடன் கணவன் மாங்கல்யத்தை ஏற்ற திலோத்தமா மனது, ஏமாற்றத்தை சுமக்கிறது.

மலர்ந்து மணம் வீசவேண்டிய அவள் மனது பூக்காமல் மொட்டிலே வாடி போய்விட, திருமண
பந்தமே கேள்விக்குறி?

திலோத்தமா அத்தனை பிரச்சனைகளையும் தனியாக எதிர்கொள்கிறாள்.

கணவன் வீட்டை விட்டு வெளியேற்ற படுகிறாள்.

அரசாங்க உத்தியோகம் பார்க்குமளவு பெண் முன்னேறினாலும் கணவன் உடன் இல்லா குறை
அவளுக்குள்ளும் உண்டு!

ருத்ரன் அவளின் குறையை தீர்த்தானா? மனைவியுடன் இணைந்தானா? அவளின் மனதை
வென்றானா?

காதலில் மெல்ல மெல்ல வீழ்ந்து திலோத்தமாவிடம் மொத்தமாக கிறங்கி நிற்கும் ருத்ரனை
முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

For more stories visit:
www.mallikamanivannan.com