MGR நல்லவரா ? கெட்டவரா? அத பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. MGRன் தனிபட்ட வாழ்க்கையை நான் ஆராய விரும்பவில்லை. யார்தான் சார் தனிபட்ட வாழ்க்கையில் நல்லவர்கள்? ஆனாலும் MGRஐ பிடிக்கும்...பிடிக்கும்.. பிடிக்கும்.. காரணம்.. அவரது ஏழைகளுக்கு உதவும் குணம்.. வள்ளல் தன்மை.. இன்றைக்கும் TVயில் MGR பட பாடல்களோ காட்சிகளோ வந்தால் என்னையறியாமல் என் முகத்தில் ஒரு பரவசம்..மகிழ்ச்சி வந்துவிடும். இத்தனைக்கும் நான் MGR ஐ நேரில் கூட பார்த்ததில்லை. ஆனாலும்..அவர்மீது என்னையறியாமல் ஒரு ஈர்ப்பு. ஒரு அன்பு.. ஒருவரை வெறுக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் நேசிப்பதற்கு எந்த காரணமும் தேவையில்லை.. என்னை பொறுத்தவரை MGR என்னால் மறக்கமுடியாதவர்.. வெறுக்கமுடியாதவர்...
கடவுள் ஏதோ ஞாபகத்தில் ஒரு அற்புதமான படைப்பு படைத்தார் அது தங்க தலைவர் பொன் மன செம்மல் ஆண்டுகள் பல கடந்தாலும் இனி இறைவனால் படைக்க முடியாது தலைவரை நேரில் பார்க்காமல் எத்தனை பேர் நல்ல பண்போடு வள்ளல் குணத்தோடு வாழ்ந்தார்கள் நானும் தீய பழக்கங்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன் என் தலைவன் எம்ஜிஆர் உலகின் கடைசி மனிதன் இருக்கும் வரை இதய தெய்வம் புகழ் ஒலித்து கொண்டே இருக்கும் வாழ்க எம்ஜிஆர் நாமம்