"ராதையைப் பாடிய தேசிகன்" - Radhaiyai Paadiya Desikan - Upanyasam by Sri APN Swami - 14-Aug-2026

APN SWAMI

APN SWAMI

23,118 views

ஜய கருட ஸுபர்ணா
14-ஆகஸ்டு-2026: ஆண்டாள் திருவாடிப்பூரம்
இடம்: மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி ஸந்நிதி, ஸ்ரீ வானமாமலை மடம்
இன்றைய ஸுதினத்தில், ஸ்ரீ அண்ணாஸ்வாமி அய்யங்கார் வித்வத் ஸபா நடத்தும் வித்வத் ஸதஸ்-ல், ஸ்ரீ உ.வே. அனந்தபத்மநாபாசார்யார் ஸ்வாமி AnannthaPadmanabhachariar APN Swami "ராதையைப் பாடிய தேசிகன்" என்ற தலைப்பில் ஆஶ்சர்யமான உபந்யாஸம் செய்தார். பல ஸூக்ஷ்மார்த்தங்களை அழகாக விவரித்துரைத்தார்.
பிராட்டியின் அயோநிஜத்வத்தை விவரிக்கும் போது, ஸீதா பிராட்டி, ருக்மிணீ பிராட்டி, ஆண்டாள் - அனைவரும் கர்ப ஸம்பந்தத்துடன் அவதரிக்கவில்லை என்று கூறுகையில்,
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையா - இல்லை, "பெரியாழ்வார் பேற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே" என்று முக்கூர் ஸ்ரீமத் அழகியசிங்கர் விளையாட்டாக ஸாதித்த விஷயத்தை இங்கு எடுத்துக்கூறியது மிகவும் அருமையாக இருந்தது.
இந்த உபந்யாஸத்திற்கு ஸ்ரீ உ.வே. வில்லூர் கருணாகராசார்யார் ஸ்வாமி எழுந்தருளியிருந்து அனுக்ரஹித்தது, இவ்வைபவத்திற்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
தாஸர்கள்,
ஸரண் ஸேவகர்கள்